நெஞ்சில் அடி வாங்கிய பின் 95 ஓட்டங்கள் விளாசல்! முகத்தில் அடிபட்டு வெளியேறிய வீரர்கள்..வலியால் கிடைத்த வெற்றி
பிக் பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி போராடி வெற்றி பெற்றது.
பான்கிராப்ட் 95
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய பெர்த் அணி 5 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக பான்கிராப்ட் 95 ஓட்டங்களும், எஸ்கினஸி 54 ஓட்டங்களும் விளாசினர்.
பெர்த் அணி இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே டேவிட் மூடி வீசிய பந்து பான்கிராப்ட்டை தாக்கியது. இதனால் அவருக்கு நெஞ்சில் லேசான வலி ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து ஆடிய அவர் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார்.
@ Paul Kane/Getty Images
@Getty Images
பெர்த் அணி வெற்றி
பின்னர் களமிறங்கிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பெர்த் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அடிபட்டது.
@Getty Images
ரன் அவுட் முயற்சியின்போது மேத்யூ கெல்லியின் முகத்தில் பந்து தாக்கியதால் அவர் 2.1 ஓவர் வீசிய நிலையில் வெளியேறினார். அதேபோல் ஆண்ட்ரூ டை-க்கு கேட்ச் பிடிக்கும்போது முகத்தில் அடிபட்டது. எனினும் அவர் 4 ஓவர்களை முழுமையாக வீசினார்.
@AAP