காலை உணவிற்கு சத்தான பச்சை பயிறு தோசை.., எப்படி செய்வது?
காலை உணவை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
காலை உணவை தவிர்ப்பதால், உடல் சீக்கிரமாக சோர்வடைந்து விடும்.
அந்தவகையில், காலை உணவிற்கு சத்தான பச்சை பயிறு தோசையை இலகுவாக எப்படி செய்வது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு- 1 கப்
- அரிசி- 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- சீரகம்- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- பெருங்காயம்- 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயிறு மற்றும் அரிசி சேர்த்து 2 முறை நன்கு கழுவி இரவு முழுக்க ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பாசிப்பயிறு, அரிசி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், கொத்தமல்லி, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் மாவை தோசை போல் ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றி வேகவைக்கவும்.
இந்த தோசையுடன் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |