PSL கிண்ணத்தை வென்ற பாபர் அஸாம் அணி
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிண்ணத்தை பெஷாவர் ஜல்மி அணி வென்றது.
சைம் அயூப் அரைசதம்
பெஷாவர் ஜல்மி மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான, PSL டி20 தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடந்தது.

முதலில் ஆடிய ஐதராபாத் கிங்ஸ்மென் அணி 18 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சைம் அயூப் (Saim Ayub) 50 பந்துகளில் 54 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளும், நஹித் ராணா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய பெஷாவர் ஜல்மி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மொஹம்மது ஹாரிஸ் 6 ஓட்டங்களில் அவுட் ஆக, அணித்தலைவர் பாபர் அஸாம் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.
ஆரோன் ஹார்டி மிரட்டல்
அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 9 ஓட்டங்களில் வெளியேற, ஆரோன் ஹார்டி (Aaron Hardie) மற்றும் அப்துல் சமாத் கூட்டணி அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர்.
இருவரின் அபார ஆட்டத்தின் மூலம் பெஷாவர் அணி 15.2 ஓவர்களிலேயே 130 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆரோன் ஹார்டி (Aaron Hardie) 39 பந்துகளில் 56 ஓட்டங்களும் (9 பவுண்டரிகள்), அப்துல் சமாத் 34 பந்துகளில் 48 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினர்.
மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும், ஆகிப் ஜாவேத் மற்றும் ஹுசைன் ஷா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |