பாரீஸ் புறநகர் பகுதிகளில் பூச்சி மருந்து அடிக்கும் அதிகாரிகள்... ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நடவடிக்கை
பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் ஒரு பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவசர கால கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
Alfortville என்ற இடத்தில் வாழும் ஒரு பெண்ணுக்கு ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக, அவர் வாழும் பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நோய் பரவாமல் தடுப்பதற்காக தெருக்களில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக மிதமான டெங்கு காய்ச்சல் ஒரு வாரத்திற்குப் பின் சரியாகிவிடும் என்றாலும், சிலருக்கு அது உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.
இதற்கிடையில், உள்ளூர் சுகாதார அலுவலக கிளை அலுவலகம், Alfortville பகுதியில் மேலும் ஐந்து பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து கொசுகக்ளைத் தவிர்ப்பதற்காக மக்கள் இரவு நேரங்களில் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.