பிரித்தானியாவில் 7 மாத குழந்தை பலி! வளர்ப்பு நாயால் வீட்டில் நடந்த பயங்கரம்
பிரித்தானியாவில் வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் 7 மாத குழந்தை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய்கடியில் பறிப்போன உயிர்
பிரித்தானியாவின் கோவென்ட்ரியில்(Coventry residence) உள்ள தங்கள் வீட்டில் ஏழு மாத குழந்தை எல்லே டோஹெர்டி(Elle Doherty), குடும்பத்தின் செல்ல நாயால் கடிக்கப்பட்டதில் இறந்துள்ளார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் குழந்தையின் வீட்டில் நடந்துள்ளது. பெல்ஜிய மெய்னோயிஸ்(Belgian Malinois) என அடையாளம் காணப்பட்ட இந்த நாய் எல்லே-வை தாக்கி பலத்த தலைக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் மிட்லேண்ட் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நாயைக் கைப்பற்றினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, அன்றே அந்த நாய் மனிதாபிமான முறையில் மருத்துவ கொலை செய்யப்பட்டது.முழுமையான விசாரணைக்குப் பிறகு, அதிகாரிகள் எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று முடிவு செய்தனர்.
காவல்துறை இரங்கல்
"குழந்தைக்கு மருத்துவமனையில் மேலதிக சிகிச்சை அளிப்பதற்கு முன்பு, சம்பவ இடத்திலேயே அவருக்கு அவசர மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர்," என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த கடினமான நேரத்தில் குழந்தையின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |