மீண்டும் களத்தில் மிரட்டிய பீட்டர்சன்! வங்கதேச லெஜண்ட் அணி மீண்டும் தோல்வி
மூத்த வீரர்கள் பங்கு கொள்ளும் சாலை பாதுகாப்பு டி20 தொடரில், வங்கதேச அணிக்கெதிரான போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவில் மூத்த வீரர்கள் கலந்து கொள்ளும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த டி20 தொடரில், இந்தியா, மேற்கிந்திய தீவு, அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணியின் மூத்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுவர்.
அதன் படி நேற்று England Legends மற்றும் Bangladesh Legends மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களான நசிமுடின் 12 ஓட்டங்களிலும், ஓமர் 5 ஓட்டங்களிலும் அவுட்டாக, அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
இதனால் வங்கதேச அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக Khaled Mashud 31 ஓட்டங்கள் எடுத்தார்.
இதையடுத்து 114 ஓடங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான Phil Mustard மற்றும் கெவீன் பீட்டர்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறியது.
அதிரடியாக விளையாடி வந்த Phil Mustard 27 ஓட்டங்களிலும், பீட்டர்சன் 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி இறுதியாக 14-வது ஓவரில் 117 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதற்கு முன்னர் இந்தியா லெஜண்ட் உடன் மோதிய ஆட்டத்தில் வங்கதேச லேஜண்ட்ஸ் அணி தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.