அவுஸ்திரேலிய லீக் தொடரை 5வது முறையாக கைப்பற்றிய அணி!
பிக் பாஷ் லீக் டி20 தொடரை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5வது முறையாக கைப்பற்றியது.
இறுதிப் போட்டி
பெர்த்தில் நடந்த இறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 175 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக மெக்ஸ்வீனி 41 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பெர்த் அணியில் ஸ்டீபன்21 ஓட்டங்களும், பான்கிராஃப்ட் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
Sam Heazlett decided to get a wriggle on. SIX! ?#BBL12 #BBLFinals pic.twitter.com/EmtS8e7nXy
— KFC Big Bash League (@BBL) February 4, 2023
அதன் பிறகு களமிறங்கிய ஹார்டி 17 ஓட்டங்களும், இங்கிலீஸ் 26 ஓட்டங்களும் எடுத்து வெளியேற, கேப்டன் டர்னர் அதிரடியில் மிரட்டினார்.
It's carried the rope!
— cricket.com.au (@cricketcomau) February 4, 2023
A 30-ball fifty for the Scorchers skipper #BBL12 pic.twitter.com/gYIopqVilS
பெர்த் வெற்றி
அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை டர்னரும், தொடர் நாயகன் விருதை மேத்யூவும் பெற்றனர்.
@Getty Images
@Getty Images: Matt King/Cricket Australia