பெட்ரோல் டீசல் விலை உயர்வு - வேறு என்ன பொருட்களின் விலை உயரும்?
பெட்ரோல் டீசல் விலை உயர்வால், பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளள நிலையில், இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் நாளொன்றுக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பை சந்தித்து வந்தன.

இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.18, CNG கிலோ ரூ.2 உயர்த்துவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்க உள்ளது.
உயரப்போகும் மற்ற பொருட்களின் விலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு உயர்வதுடன் விளைநிலங்களில் இருந்து சந்தைக்கு கொண்டு வரப்படும் பழங்கள், காய்கறிகள் விலை உயரும்.

பால் போன்ற குளிரூட்டப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
தொழிற்சாலைகளில் இருந்து கடைகளுக்கு கொண்டு வரப்படும் சோப்பு, எண்ணெய், பிஸ்கட் ஆகிய மளிகை பொருட்கள் விலை உயரும்.

மேலும், ஆட்டோ, டாக்ஸி, Rapido போன்ற சேவைகள், தனியார் பேருந்து, சரக்கு லாரி ஆகியவற்றின் கட்டணமும் அதிகரிக்கும்.

அதே போல், ஸ்விக்கி, ஸ்மோட்டோ, பிலிங்கிட், அமேசான் போன்ற போன்ற டெலிவரி நிறுவனங்கள் மற்றும் கொரியர் நிறுவனங்கள் டெலிவரி கட்டண உயர்வை அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |