ஈரான் போர்: பிரான்சில் அதிகரித்துவரும் பெட்ரோல் விலை
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால், எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது அனைவரும் அறிந்ததே.
பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தற்போது பிரான்சிலும் வாகன எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்சில் அதிகரித்துவரும் எரிபொருள் விலை

பிரான்சில் இரண்டு நாட்கள் இடைவெளியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிற்றருக்கு 20 சென்ட் வரை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.
சில நாடுகளில், பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலைகளை உயர்த்த அனுமதி உள்ளது.
என்றாலும், சிலர் குறிப்பிட்ட அளவுக்குமேல் விலைகளை உயர்த்தியுள்ளதாக துறைசார் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, எரிபொருள் துறை பிரதிநிதிகளுக்கு பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |