ரூ. 96,627 கோடி நிறுவனம்! இந்திய மருத்துவ துறையில் தலைநிமிர செய்த பெண் CEO
உலகின் முன்னணி மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான லுபினின்(Lupin) CEO-வாக வினிதா டி. குப்தா சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.
யார் இந்த வினிதா டி. குப்தா?
இந்திய மருந்துத் துறையில் ஒரு முக்கியமான நபரான வினிதா டி. குப்தா(Vinita D. Gupta), 2013 முதல் முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான லுபினின்(Lupin) CEO-வாக இருந்து வருகிறார்.
வினிதா குப்தாவின் மூலோபாய தலைமைத்துவம் மற்றும் வணிகப் திறமையின் காரணமாக Lupin நிறுவனம் சுமார் ரூ. 96,627 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்துள்ளது.
1968 இல் தந்தை தேஷ் பந்தூ குப்தாவால்(Desh Bandhu Gupta) நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் வினிதா குப்தாவின் பயணம் 1997-லில் தொடங்கியது.
இந்த நிறுவனம் ஆரம்பத்தில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்தது.
வினிதா குப்தாவின் தலைமைக்கு கீழ் Lupin நிறுவனமானது குறிப்பிடத்தக்க உலகளாவிய விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது.
2023 செப்டம்பரில் Forbes தெரிவித்தபடி, Lupin நிறுவனத்தின் வெற்றி குப்தா குடும்பத்தை 5.75 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்பிற்கு உயர்த்தியுள்ளது.
கல்வி மற்றும் திருமணம்
குப்தாவின் கல்விப் பின்னணி மருந்தியலில் வேரூன்றி உள்ளது, அவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
பின்னர் இல்லினாய்ஸ், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் Kellogg மேலாண்மைப் பள்ளியில் MBA படித்தார்.
குப்தா அமெரிக்காவை தளமாகக் கொண்ட முக்கியமான முதலீட்டாளரும் தொழில்முனைவருமான பிரிஜ் சர்மாவுடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினர் அமெரிக்காவின் புளோரிடாவில் தங்கள் மகன் கிருஷ் சர்மாவுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |