சிக்ஸர் மன்னனின் தலைமையில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இங்கிலாந்து அணித்தலைவராக பிலிப் சால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோஸ் பட்லர் காயம்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 11ஆம் திகதி தொடங்குகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு ஜோஸ் பட்லருக்கு பதிலாக புதிய அணித்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் (Jos Buttler) இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் விக்கெட் கீப்பரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான பிலிப் சால்ட் (Philip Salt) டி20 இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்க உள்ளார்.
மேலும், பட்லருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் வீரர் ஜேமி ஓவர்டன் (Jamie Overton) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜோர்டான் காக்ஸும் அணியில் இணைந்துள்ளார்.
அணி விபரம்:
- பிலிப் சால்ட்
- ஜோப்ரா அர்ச்சர்
- ஜேக்கப் பேத்தேல்
- பிரைடன் கர்ஸ்
- ஜோர்டான் காக்ஸ்
- சாம் கர்ரன்
- ஜோஷ் ஹல்
- வில் ஜேக்ஸ்
- லியாம் லிவிங்ஸ்டன்
- சகிப் மஹ்மூத்
- டான் மௌஸிலே
- ஜேமி ஓவர்டன்
- அடில் ரஷீத்
- ரீஸ் டாப்லே
- ஜான் டர்னர்
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |