லண்டனுக்கு இனி இந்த இடத்திலிருந்து இடைவிடாத விமான சேவைகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
புகழ்பெற்ற அமெரிக்காவின் Philadelphia சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு மீண்டும் இடைவிடாத விமான சேவைகள் தொடங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே கொரோனா தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமான நிறுவனங்கள் மட்டுமே லண்டன் Heathrow மற்றும் Philadelphia சர்வதேச விமான நிலையம் இடையே இடைவிடாத விமான சேவையை வழங்குகின்றன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மார்ச் 2021 இறுதியில் லண்டனுக்கு செல்லும் தினசரி விமான சேவையை மீண்டும் தொடங்கிய நிலையில் தற்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு பிரித்தானியாவுக்கு பறக்கும் பயணிகள் தங்கள் விமான பயணங்களுக்காக 2 விடயங்களை செய்ய வேண்டும். அதாவது, விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் பயணிகள் இருப்பிடப் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக பிரித்தானியா வந்த பிறகு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட வேண்டும் மற்றும் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும்.
முழுமையாக தடுப்பூசி செலுத்தாதவர்கள் பிரித்தானியா செல்வதற்கு முன் மூன்று நாட்களுக்குள் கொரோனா சோதனைகளை எடுத்து கொள்ள வேண்டும். பயணிகள் பிரித்தானியாவுக்கு வந்தவுடன்10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.