ருத்ர தாண்டவமாடி 33 பந்தில் 68 விளாசிய சால்ட்! டெல்லி அணியை சம்பவம் செய்த KKR
ஐபிஎல்லின் 47வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது.
தத்தளித்த டெல்லி
ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
111 ஓட்டங்களுக்கு 8 விக்கெட் என தத்தளித்த டெல்லி கேபிட்டல்ஸை, குல்தீப் யாதவ் 35 (26) எடுத்து கௌரவ ஸ்கோரை எட்ட உதவினார்.
Venkatesh Iyer plucks a fine low catch & @KKRiders get the dangerous Jake Fraser-McGurk early ?#DC three down now inside the powerplay!
— IndianPremierLeague (@IPL) April 29, 2024
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #KKRvDC pic.twitter.com/84HRetp0ZM
20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணி, 9 விக்கெட்டு 153 ஓட்டங்கள் எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பிலிப் சால்ட் சரவெடி
அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் பிலிப் சால்ட் (Philip Salt) சரவெடியாய் வெடித்தார். டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்த அவர், 33 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி 68 ஓட்டங்கள் குவித்தார்.
மறுமுனையில் நரைன் (15), ரிங்கு சிங் (11) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (33), வெங்கடேஷ் ஐயர் (26) கூட்டணி மூலம், கொல்கத்தா அணி 16.3 ஓவரில் 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் புள்ளிகள் 12 ஆக உயர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
What a way to wrap up a solid all-round show ?
— IndianPremierLeague (@IPL) April 29, 2024
A commanding performance by Kolkata Knight Riders at home ?
And that win helps them consolidate their position in the points table ?
Scorecard ▶️ https://t.co/eTZRkma6UM#TATAIPL | #KKRvDC | @KKRiders pic.twitter.com/FFBYyylTKU
Varun Chakaravarthy's sparkling spell helps him bag the Player of the Match Award ✨?
— IndianPremierLeague (@IPL) April 29, 2024
Scorecard ▶️ https://t.co/eTZRkma6UM#TATAIPL | #KKRvDC | @KKRiders pic.twitter.com/h9wd8qO589
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |