தாத்தா இளவரசர் பிலிப்பைத்தான் சந்திக்க முடியவில்லை... இந்த பிலிப்பையாவது சந்திக்க முடிந்ததே: இளவரசர் ஹரி
பிரித்தானியாவை விட்டு வெளியேறியதால், தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி நாட்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்தார் இளவரசர் ஹரி.
சரி அந்த இளவரசர் பிலிப்பைத்தான் சந்திக்க முடியவில்லை, இந்த இளவரசர் பிலிப்பையாவது சந்திப்போம் என தனது சித்தப்பாவின் மகளான யூஜீனியின் மகனான இளவரசர் பிலிப்பை சந்திக்கச் சென்றுள்ளார் இளவரசர் ஹரி.
தங்கள் தாத்தாவான இளவரசர் பிலிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டியுள்ளனர் இளவரசி யூஜீனியும் சாராவும்.
இந்நிலையில், தாத்தா இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி, தனது சகோதரியான இளவரசி யூஜீனியின் வீட்டில் தங்கியுள்ளார்.
இளவரசர் ஹரியும் இளவரசி யூஜீனியும் சகோதர சகோதரிகள் மட்டுமல்ல, நெருங்கிய நண்பர்களும் என்பது பலரும் அறிந்த ஒரு விடயமாகும்.