கிளென் பிலிப்ஸின் சரவெடி ஆட்டம்: இந்திய அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு
Glenn Phillips smash 70 runs vs india: இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து 180 ஓட்டங்கள் குவித்தது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வரும் இரண்டாவது டி20 போட்டியில், கிளென் பிலிப்ஸ் மற்றும் ஜேக்கப்ஸ் அரைசதம் விளாச நியூசிலாந்து 180 ஓட்டங்கள் குவித்தது.
தடுமாறிய நியூசிலாந்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சின் ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய நியூசிலாந்து துடுப்பாட்டத்தை தொடங்கியது.
டிம் செய்பெர்ட் 7 ஓட்டங்களில் அர்ஷீத் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, டேர்ல் மிட்செல் 6 ஓட்டங்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பின்னர் ஃபின் ஆலன் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரின்ஸ் யாதவ் ஓவரில் போல்டானார். இதனால் நியூசிலாந்து அணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தடுமாறியது.
பிலிப்ஸ் அதிரடி
அப்போது கைகோர்த்த கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips), பெவோன் ஜேக்கப்ஸ் (Bevon Jacobs) கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய பிலிப்ஸ் 43 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
ஜேக்கப்ஸ் 58 (46) ஓட்டங்களில் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் அக்சர் பட்டேல் ஓவரில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 180 ஓட்டங்கள் குவித்தது.
அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், பிரின்ஸ் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

