பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்த இந்திய கிராமம்.., ஏன் தெரியுமா?
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகம் பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
ஜலோர் மாவட்டத்தில் 15 கிராமங்களை கொண்ட சுதாமாதா பட்டி என்ற பஞ்சாயத்து கூட்டத்தில் பெண்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தகூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பெண்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பட்டன் போன்களை பெண்கள் வீட்டிற்குள் மட்டும் பயன்படுத்தலாம் என்று பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பெண்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால், குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் கண்பார்வை பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் விளக்கமளித்துள்ளது.

மேலும், மாணவர்கள் கல்வி ரீதியாக தேவைப்பாட்டால் வீட்டிற்குள் மட்டும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வருகிற ஜனவரி 26ஆம் திகதி முதல் 15 கிராமங்களில் அமலுக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |