பள்ளிக்கு மொபைல் கொண்டுவரும் மாணவர்கள்: இங்கிலாந்தில் அறிமுகமாகும் புதிய விதி
Phones to be banned from pupils' bags or pockets under stricter rules for schools in England: இங்கிலாந்து பள்ளிகளில், மாணவ மாணவியர் மொபைல் போன்கள் வைத்திருப்பது தொடர்பில் புதிய விதி அறிமுகமாக உள்ளது.
இங்கிலாந்து பள்ளிகளில், மாணவ மாணவியர், தங்கள் பைகள் அல்லது பாக்கெட்டில் கூட மொபைல் போன்களை வைத்திருக்காத வகையில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மொபைல் போன்கள் தொடர்பில் புதிய விதி
இங்கிலாந்திலுள்ள பள்ளிகளில், மாணவ மாணவியர் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து தங்கள் பைகள் அல்லது பாக்கெட்களில் வைத்துக்கொள்ள அனுமதி உள்ளது.

என்றாலும், இடைவேளைகளின்போது மாணவ மாணவியர் மொபைல்களை பயன்படுத்த முடியும் என்பதால், இந்த விதியால் முழுமையான பயன் இல்லை என கல்வியாளர்கள், அமைச்சர்கள் என பலதரப்பினரும் விமர்சனம் முன்வைத்துவருகிறார்கள்.
ஆகவே, இனி மாணவ மாணவியர் பள்ளிக்கு வந்தபின் மொபைல் போன்களை தங்கள் பைகளிலோ பாக்கெட்டிலோ கூட வைத்துக்கொள்ள முடியாது என்னும் வகையில் புதிய விதி அறிமுகமாக உள்ளது.
இந்த விதி, 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமுலுக்கு வர உள்ளது.
பள்ளி என்பது படிப்பதற்கும், சக மாணவ மாணவியருடன் நட்பு வளர்த்துக்கொள்வதற்குமான இடம், அது மொபைலை ஸ்க்ரோல் செய்துகொண்டிருக்கும் இடம் அல்ல என்னும் தெளிவான செய்தியை மாணவ மாணவியருக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் அரசு தெரிவித்துக்கொள்வதற்கான அறிவிப்பு இது என்கிறார் கல்விச் செயலரான லூசி பவல்.
இந்த விதியை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி தலைவர்கள் கூட்டமைப்பினர், இந்த விதி தொடர்பில் பிரச்சினை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

அதாவது, பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் மொபைலையும் வாங்கி பாதுகாப்பாக வைக்கவேண்டுமானால், அதற்கு பாதுகாப்பான சிறிய பைகள் அல்லது லாக்கர் அமைப்புகள் வேண்டும்.
அத்தனை மாணவ மாணவியருக்கும் இந்த வசதிகளை செய்துகொடுக்கவேண்டுமானால், அது செலவு பிடிக்கும் ஒரு விடயம். ஆகவே, அரசு இந்த விடயம் குறித்தும் தெளிவுபடுத்தவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.