கர்ப்பிணிப்பெண்ணின் தந்தைக்கு வந்த தொலைபேசி அழைப்பு: பதறி ஓடிவந்தபோது கண்ட பயங்கர காட்சி
இங்கிலாந்தில் தனக்கு வந்த மொபைல் அழைப்பில் தனது மகளுடைய கதறலைக் கேட்ட ஒரு தந்தை மகளைக் காண ஓடோடிவந்தபோது, அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்தது.+
மகளிடமிருந்து வந்த மொபைல் அழைப்பு
இங்கிலாந்திலுள்ள Stoke Newington என்னும் இடத்தில் வாழ்ந்துவந்த Ailish Walsh (28) என்ற பெண், இம்மாதம் 15ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் தனது தந்தைக்கு அறிமுகமான பெண் ஒருவரை மொபைலில் அழைத்துள்ளார். அந்த அழைப்பில் சண்டையிடும் மற்றும் அலறும் சத்தம் கேட்கவே, உடனடியாக மகளைக் காண ஓடோடிச் சென்றுள்ளார் அந்த தந்தை.
மகள் வாழ்ந்த வீட்டுக்கு அவர் சென்றபோது, தன் மகள் இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் தன் மகளை அள்ளியணைத்து மடியில் கிடத்திக்கொண்டிருக்க, அதற்குள் தகவலறிந்துவந்த மருத்துவ உதவிக்குழுவினர் Ailishக்கு முதலுதவி சிகிச்சையளித்துள்ளார்கள்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி Ailish உயிரிழந்துவிட்டார்.
பெரும் துயரம் என்னவென்றால், Ailish ஆறு மாத கர்ப்பிணி!
Image: GoFundMe
காதலன் கைது
Ailishஐ கொலை செய்ததாக, அவரது காதலரான Liam Taylor (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடற்கூறு ஆய்வில், Ailish உடலில் 40க்கும் மேற்பட்ட கத்திக் குத்துக் காயங்கள் இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்தில் இரத்தம் தோய்ந்த கத்திரிக்கோல் ஒன்றும் கிடைத்துள்ளதால், அதைக் கொண்டுதான் Ailish குத்திக்கொல்லப்பட்டிருப்பார் என கருதப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்ப்பிணி என்று கூட பாராமல் தன் காதலியை Liam கொடூரமாக கொன்றது ஏன் என்பது தெரியவில்லை. பொலிசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.