வருமான வரியை இனி PhonePe மூலம் செலுத்தலாம்!
இந்தியாவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் நிறுவனங்களில் போன் பே (Phone Pe) முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், போன் பே நிறுவனம் இப்போது வரி செலுத்துவோருக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தொலைபேசி மூலமும் வரி செலுத்தலாம்.
இந்த புதிய சேவையானது PhonePe மற்றும் டிஜிட்டல் B2B கட்டணங்கள் மற்றும் சேவை வழங்குநரான Paymate ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுப்பணியாகும்.
கிரெடிட் கார்டு அல்லது UPI மூலம் ஃபோன் பேயில் வருமான வரி பரிவர்த்தனைகள் செய்யப்படலாம். இந்த புதிய அம்சம் திங்களன்று (ஜூலை 24) பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வரி செலுத்தினால், வங்கிக் கொள்கையின்படி 45 நாட்கள் வட்டியில்லா கால அவகாசம் மற்றும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும் என்று ஃபோன் பே கூறுகிறது.
ஆனால் வருமான வரி செலுத்தும் வசதி மட்டுமே இந்த அம்சத்தில் இருக்கும். ஐடிஆர் தாக்கல் செய்ய பயனர்கள் வழக்கமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பயன்பாட்டின் முகப்பு வருமான வரி ஐகானுடன் வருமான வரி செலுத்துவதற்கான ஆப்ஷனை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
PhonePe launches feature to pay income tax, PhonePe income tax payment feature, Digital payments and fintech platform PhonePe, Income Tax Icon, Income Tax UPI payment, Income Tax payment with Credit Card