மிதவைப்படகில் தற்கொலை செய்துகொண்ட புகலிடக்கோரிக்கையாளரின் புகைப்படம் வெளியானது...
பிரித்தானிய அரசால் மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்ட புகலிடக்கோரிக்கையாளரின் பெயர், புகைப்படம் முதலான விடயங்கள் வெளியாகியுள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பலி
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசு முடிவு செய்தது.
பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டார்கள்.
Leonard Farruku
இந்நிலையில், அந்த மிதவைப்படகில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Dorset என்னுமிடத்திலுள்ள Portland துறைமுகத்தில் அந்த படகு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த படகில் தங்கியிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களில் ஒருவர் கடந்த செவ்வாயன்று தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
புகலிடக்கோரிக்கையாளரின் புகைப்படம் வெளியானது...
தற்கொலை செய்துகொண்ட புகலிடக்கோரிக்கையாளரின் பெயர், புகைப்படம் முதலான விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தற்கொலை செய்துகொண்ட புகலிடக்கோரிக்கையாளர், அல்பேனியா நாட்டவரான லியோனார்ட் (Leonard Farruku, 27) என பிரித்தானிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
CREDIT: Finnbarr Webster/Getty Images
லியோனார்ட் தற்கொலை செய்துகொள்ளும் முன் கடுமையான மன அழுத்தத்திலிருந்ததை அவருடன் அதே படகில் தங்கியிருந்தவர்கள் கவனித்ததாக கூறப்படுகிறது.
இத்தாலியில் வாழ்ந்துவரும் லியோனார்டின் சகோதரியான ஜோலா (Jola Dushku, 33), தன் சகோதரர், மரணத்துக்கு முன், அந்த மிதவைப்படகில் மிருகம் போல நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
CREDIT: Finnbarr Webster/Getty Images
இதற்கிடையில், லியோனார்டின் மரணத்தால் அந்த மிதவைப்படகில் தங்கியிருக்கும் 300 புகலிடக்கோரிக்கையாளர்கள் அதிர்ச்சியிலும், மன அழுத்தத்திலும் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |