பிரித்தானியாவில் கழிவறை ஒன்றில் விளாடிமிர் புடினின் புகைப்படம்: தெரிவித்த காரணம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதி ஒன்று விளாடிமிர் புடினின் புகைப்படத்தை தங்களின் கழிவறையில் நிறுவியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 13வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கி துணிவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
ரஷ்யாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பல்வேறு தரப்பு மக்களும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் ரஷ்ய இறக்குமதி பொருட்களை தவிர்த்து வருகிறது. மட்டுமின்றி, ரஷ்யாவில் செயல்பட்டு வந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், பிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதி ஒன்று தங்கள் கழிவறையில் விளாடிமிர் புடினின் புகைப்படத்தை நிறுவி, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குறித்த மதுபான விடுதியில் ஒருமுறை தீவிர ரஷ்ய ஆதரவாளரான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் வருகை தந்துள்ளார்.
குறித்த மதுபான விடுதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடினின் கையசைக்கும் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.