கனடாவில் கரடிகளை புகைப்படம் எடுக்க சென்ற நபர் சந்தித்த எதிர்பாராத அதிர்ச்சி
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரடிகளை புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக் கலைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக கரடியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு எதிர்பாராத தற்காப்புக்காக செய்யப்படும் தாக்குதல் என வனத்துறை அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். இந்த காலகட்டத்தில் grizzly bear எனப்படும் கரடிகளை அதிகம் காணலாம். Babine ஏரிக்கரை வழியாக அந்த புகைப்படக்கலைஞர் கரடிகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றிருக்கிறார். பொதுவாகவே, சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலத்தில், கரடிகளைக் காண்பதற்கு அந்த இடம் நல்ல இடம் என பெயர் பெற்ற இடம் அது.
அப்படியிருக்கும் நிலையில், அங்கு புகைப்படம் எடுக்கச் சென்ற அந்த நபரை கரடி ஒன்று திடீரென தாக்கியுள்ளது. அதில் அவரது கை பலத்த காயம் அடைந்துள்ளது.
அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என கருதப்படுகிறது.