பள்ளிகளில் வாரம் 5 நாட்களும் பி.டி. வகுப்பு.., அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகளில் வாரத்தில் 5 நாள்கள் வரை உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது..,
அதன்படி, வழக்கம்போல காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உடற்கல்வி, இணையக் கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, இனி வாரத்தில் ஐந்து நாட்களும் மாணவர்களுக்குப் பி.டி. வகுப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கால அட்டவணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்று நாட்கள் வழக்கமான உடற்கல்விப் பயிற்சிகள் நடைபெறும்.

மீதமுள்ள இரண்டு நாட்களில் நடைபெறும் கூடுதல் பாடத்திட்டம் மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கான வகுப்புகளை, மாணவர்கள் விரும்பினால் பி.டி. வகுப்புகளாக மாற்றிக்கொள்ளலாம்.
மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் பி.டி. வகுப்புகளை ரத்து செய்யக் கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை விளையாட்டுகளில் ஊக்கப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |