இளவரசி கேட் மிடில்டனை விடாது துரத்தும் புகைப்பட சர்ச்சை... வெளியான புதிய ஆதாரம்
பிரித்தானிய அரண்மனை சுமார் ஓராண்டுக்கு முன்னர் வெளியிட்ட குடும்ப புகைப்படமும் திருத்தப்பட்டதாக தற்போது இளவரசி கேட் மிடில்டன் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் 10 திருத்தங்கள்
தொடர்புடைய புகைப்படமானது வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியின் உத்தியோகப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் மறைந்த ராணியார் இரண்டாம் எலிசபெத் மற்றும் பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப் பிள்ளைகள் என பலர் காணப்படுகின்றனர்.
குறித்த புகைப்படத்தை பதிவு செய்தவர் கேட் மிடில்டன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெளியிடப்பட்ட திகதி ஏப்ரல் 21, 2023 என பதிவாகியுள்ளது. அன்றைய நாள் ராணியாரின் 97வது பிறந்தநாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,
தற்போது Getty நிறுவனம் அந்த புகைப்படத்தில் 10 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2022 ஆகஸ்டு மாதம் பால்மோரல் மாளிகையில் வைத்து அந்த புகைப்படமாது பதிவு செய்யப்பட்டுள்ளது.
Today would have been Her Late Majesty Queen Elizabeth’s 97th birthday.
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) April 21, 2023
This photograph - showing her with some of her grandchildren and great grandchildren - was taken at Balmoral last summer.
? The Princess pic.twitter.com/1FOU4Ne5DX
புகைப்படங்கள் மீது நம்பிக்கை இல்லை
சமீபத்தில் அன்னையர் தினத்தன்று கேட் மிடில்டன் வெளியிட்ட புகைப்படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், Getty நிறுவனம் ராணியாருடனான அந்த புகைப்படத்தையும் ஆய்வுக்கு உட்படுத்திய நிலையிலேயே 10 திருத்தங்கள் செய்யப்பட்டதாக கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில், AFP செய்தி நிறுவனத் தரப்பில் இருந்து கென்சிங்டன் அரண்மனை வெளியிடும் புகைப்படங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும், கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது நாள் வரையில், கென்சிங்டன் அரண்மனை பகிரும் புகைப்படங்கள் அனைத்தும் நம்பகத்தன்மையுடன் இருந்தது என்றும், ஆனால் தற்போது திருத்தப்பட்ட புகைப்படங்களை கென்சிங்டன் அரண்மனை வெளியிடுவது ஏற்ப்ய்டையது அல்ல என்றும் AFP செய்தி நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.