ஈபிள் கோபுரத்தைச் சுற்றி நடக்கும் பிக்பொக்கெட்டுகள்., பாரிஸ் 2024-க்கு முன் ஒடுக்க நடவடிக்கை
பாரிஸ் 2024-க்கு முன் ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள பிக்பொக்கெட்டுகளை ஒடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஈபிள் கோபுரத்தைச் சுற்றி நடக்கும் பிக்பொக்கெட்டுகள்
2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக ஈபிள் கோபுரத்தைச் சுற்றி நடக்கும் பிக்பொக்கெட்டுகள் மற்றும் மோசடி செய்பவர்களின் குழுவை ஒடுக்கத் தொடங்குவோம் என்று பாரிஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பாகிஸ்தானிய நினைவு பரிசு விற்பனையாளர்களால் போத்தல்களால் தாக்கப்பட்டதில் உள்ளூர் இளைஞர் ஒருவர் தலையில் காயம் அடைந்தார். சிறிய ஈபிள் கோபுர நினைவுப் பொருட்களைத் திருட முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Getty Images
இந்நிலையில், பாரிஸ் காவல்துறைத் தலைவர் Laurent Nuñez அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், குற்றங்களுக்கு எதிராக போராடவும், பிரச்சனை செய்பவர்களை கலைக்கவும் காவல்துறை ஈபிள் கோபுர தளத்தைச் சுற்றி காவலர்களை நிறைக்கப்போவதாக தெரிவித்தார்.
2024 ஒலிம்பிக்
பிரான்ஸ் தலைநகர் 2024ல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது.
ஈபிள் கோபுரம் இருக்கும் சாம்ப் டி மார்ஸ் பூங்காவில் பதிவாகியுள்ள குற்றத்தின் அளவு, 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போது பிரான்சின் நற்பெயருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அவர் கூறினார்.
Reuters
இந்த ஆண்டு ஜூன் வரை ஈபிள் கோபுரத்தைப் பார்க்க 1.6 மில்லியன் பார்வையாளர்க வந்துள்ளார். இந்த எண்ணிக்கை 2022-ன் முடிவில் 5.5 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது 2019 விட 10 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.