பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம் ஒன்று: பின்னணி
A small village will head to the polls tomorrow to decide if they leave the UK: பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை கிராமம் ஒன்றில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன். 350 பேர் மட்டுமே வாழும் பிடிங்டன் கிராமம், பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.

அதாவது, வெறும் 350 பேர் வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
பிடிங்டன் கிராமத்தில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான பிரம்மாண்ட கட்டிடங்கள் உள்ளன.

அந்தக் கட்டிடங்களில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, அப்படி ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு தங்கவைக்கப்படுவதால், தங்கள் கிராமத்தின் பாதுகாப்பும் தனியுரிமையும் பாதிக்கப்படும் என அஞ்சும் அக்கிராம மக்கள், பிரித்தானியாவை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

அது தொடர்பில் நாளை அக்கிராமத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் பிடிங்டன் கிராம மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் ஆதரவையும் கோரியுள்ளார்கள் பிடிங்டன் கிராம மக்கள்!