பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: வாக்கெடுப்பு முடிவுகள்
English village votes to leave UK: இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன். 350 பேர் மட்டுமே வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆகவே, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.
வாக்கெடுப்பு முடிவுகள்
நேற்று அது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இன்று, புதன்கிழமை காலை வாக்குகள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

வாக்கெடுப்பில் 312 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில், 285 பேர் பிடிங்டன் கிராமம் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவாகவும், 26 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்கு செல்லாத வாக்காகியுள்ளது.
இந்நிலையில், வாக்கெடுப்பு குறித்து பேசிய கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரான லிசா நாண்டி, புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, அது தொடர்பான சுமையை பல இடங்களுக்கும் பகிரவேண்டியுள்ளது என்பது குறித்து அரசு மென்மையாக பிடிங்டன் மக்களுக்கு சொல்லி புரியவைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.