இணையத்தில் தேடிய அந்த விடயம்... ஆயுள் தண்டனை பெற்ற 230 மில்லியன் பவுண்டு சொத்துக்களுக்கு வாரிசு
பிரித்தானியாவில் பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் பேரப்பிள்ளை, தமது நெருங்கிய நண்பனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார்.
குறைந்தது 19 ஆண்டுகள்
பிரித்தானியாவின் Llandaff மாவட்டத்தில் தனியாக குடியிருப்பு ஒன்றில் சில ஆண்டுகளாகத் தங்கி வந்துள்ளனர் கல்லூரி நண்பர்களான William Bush மற்றும் Dylan Thomas ஆகியோர்.
ஆனால் 23 வயதான வில்லியம் தமது காதலியுடன் தனியாக செல்ல முடிவு செய்ததை அடுத்து தாமஸ் அந்தக் கொடூர திட்டத்தை முன்னெடுத்துள்ளார். சுமார் 230 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுக்கு ஒரே வாரிசான 24 வயது தாமஸ் தற்போது குறைந்தது 19 ஆண்டுகள் என ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
சர் கில்பர்ட் ஸ்டான்லி தாமஸ் என்ற கோடீஸ்வரரின் பேரப்பிள்ளையே இந்த தாமஸ். சம்பவத்தன்று, 2023 டிசம்பர் 24ம் திகதி வில்லியம் 37 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் மட்டும் 16 முறை தாக்கப்பட்டுள்ளது.
வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கில் தாமஸ் தமது ஒரு கையை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற விசாரணையில் தாமஸ் தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
நண்பனுக்கு காதலி
இருப்பினும் அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், நீதிமன்றம் குறைந்தது 19 ஆண்டுகள் என ஆயுள் தண்டனைக்கு விதித்துள்ளது. மேலும், தமது நண்பனை கத்தியால் தாக்குவதற்கு முன்பு இணையத்தில் கழுத்தை கத்தியால் தாக்குவது தொடர்பில் தாமஸ் தகவல் சேகரித்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் உண்மையனா காரணம் விசாரணையில் வெளிவரவில்லை என்றாலும், வில்லியம் தமது காதலியுடன் தனியாக குடியிருக்க முடிவு செய்ததே, தாமஸை கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தமது ஒரே ஒரு நண்பனுக்கு காதலி இருப்பதும் தாமஸை நிலைகுலைய வைத்துள்ளது. வில்லியத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாமஸே முன்னெடுத்து செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், வில்லியம் தமது காதலியுடன் அதிக நேரம் செலவிடுவதும், தம்மை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தாமஸ் கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றே நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |