கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட நபருக்கு நேர்ந்துள்ள தலைக்குனிவு
கனடாவில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான்கு பேர் முக்கிய வேட்பாளர்களாக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டார்கள். அவர்களில் இரண்டு பேருக்கு தலைக்குனிவே மிஞ்சியுள்ளது!
தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்
கனடாவைப் பொருத்தவரை, மக்கள் பிரதமரை நேரடியாகத் தெர்ந்தெடுப்பதில்லை. தேர்தலில் எந்தக் கட்சி அதிக இருக்கைகளைக் கைப்பற்றுகிறதோ, அந்தக் கட்சியின் தலைவர் நாட்டின் பிரதமராவார்.
அவ்வகையில், லிபரல் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரான மார்க் கார்னி (60) தேர்தலில் போட்டியிட்டார்.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவரான Pierre Poilievre (45) என்பவர் தேர்தலில் போட்டியிட்டார்.
Bloc Québécois கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரான Yves-François Blanchet என்பவரும் களம் கண்டார்.
நியூ டெமாக்ரட்டிக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங் (46) போட்டியிட்டார்.
இரண்டு பேருக்கு தலைக்குனிவு
இந்நிலையில், லிபரல் கட்சிக்கு இணையாக போட்டிக்கு நின்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான Pierre Poilievre, தான் போட்டியிட்ட Carleton தொகுதியிலேயே தோல்வியடைந்துவிட்டார்.
அதேபோல, Burnaby Central தொகுதியில் போட்டியிட்ட நியூ டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங்கும் தோல்வியடைந்துவிட்டார்.
அத்துடன், 2021இல் 25 இருக்கைகளைக் கைப்பற்றிய அவரது கட்சி, இந்த தேர்தலில் வெறும் 7 இருக்கைகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
தனது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைமையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஜக்மீத் சிங்.
ஆக, கிட்டத்தட்ட இவர்கள் வசம் இருந்த இருக்கைகளை எல்லாம் கைப்பற்றி மார்க் கார்னியின் லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
தனிப்பெரும்பான்மை பெற லிபரல் கட்சிக்கு 172 இருக்கைகள் தேவைப்படும் நிலையில், அக்கட்சி 169 இருக்கைகளை கைப்பற்றியுள்ளது. இந்த இருக்கைகளின்படி பார்த்தால், கார்னி, மைனாரிட்டி அரசுதான் அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |