100 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும் - இங்கிலாந்து முன்னாள் வீரர் கோரிக்கை
100 மீட்டர் சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கோரிக்கை வைத்துள்ளார்.
100 மீட்டருக்கு 12 ஓட்டங்கள்
கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுவது உண்டு. சமீபத்தில், Bunny Hop கேட்ச் விதிகளில் மாற்றம், 2 பந்து விதிகள் கொண்டு வரப்பட்டது.
இதே போல் சிக்ஸரில் புதிய விதி மாற்றம் கொண்டு வரவேண்டுமென இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் முன்னதாகவே சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன். கிரிக்கெட்டில் ஒரு துடுப்பாட்ட வீரர் 100 மீட்டருக்கு அதிகமாக சிக்ஸர் அடித்தால் 12 ஓட்டங்கள் வழங்க வேண்டும்.
I’ve said it before and I will say it again, if a batter hits a six that is over 100m, 12 runs should be added to the score!
— Kevin Pietersen🦏 (@KP24) August 24, 2025
More batters will try and with more batters trying, more entertainment.
இதனால், அதிக வீரர்கள் முயற்சிப்பார்கள். அதிக வீரர்கள் முயற்சித்தால் அதிக பொழுதுபோக்கு கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு தென் அப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வீரர் சாகித் அஃபிரிடி 153 மீட்டருக்கு அடித்த சிக்ஸரே கிரிக்கெட்டின் நீண்ட சிக்ஸராக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |