தித்திக்கும் சுவையில் பிள்ளையார்பட்டி மோதகம்.., இலகுவாக செய்யலாம்
பண்டிகை காலங்களில் இருந்தே வீட்டில் விசேஷங்கள் என்றால் உடனே நாம் செய்யக்கூடியது இனிப்பு தான்.
அதிலும் விநாயகர் சதுர்த்தி என்றால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விநாயகருக்கு பிடித்த மோதகம் அல்லது கொழுக்கட்டை செய்வோம்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பிள்ளையார்பட்டி மோதகம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- பாசி பருப்பு- ½ கப்
- தேங்காய்- ½
- வெல்லம்- 2 கப்
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி சேர்த்து 2 முறை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து பின் துணியில் கொட்டி 15 நிமிடம் உலரவைக்கவும்.
பின் ஒரு வாணலில் சிறிது நெய் சேர்த்து அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆறவைக்கவும்.
அடுத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றும்பாதியாக விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்து கெட்டியாகி வந்ததும் இதில் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து மிதமான தீயில் வைத்து கெட்டியாகும்வரை வேகவைக்கவும்.
பின் இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கிளறி ஆறவைக்கவும்.
இறுதியை இதனை கொழுக்கட்டை அச்சில் வைத்து எடுத்து பின் இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தல் சுவையான மோதகம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |