விநாயகருக்கு பிடித்த சுவையான மோதகம்.., இலகுவாக எப்படி செய்வது?
விநாயக சதுர்த்தி என்பது இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான ஒரு விழாவாகும்.
விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு பிடித்த இந்த மோதகத்தை செய்து படைத்து வழிபடுவது சிறப்பானது.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சுவையான மோதகம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- பாசி பருப்பு- ½ கப்
- உப்பு- 1 சிட்டிகை
- நாட்டு சர்க்கரை- 1 கப்
- தேங்காய் துருவல்- 1 கப்
- ஏலக்காய்- 3
செய்முறை
முதலில் ஒரு பச்சரிசி மற்றும் பாசி பருப்பை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் வாணல் வைத்து உலர வைத்த அரிசி பருப்பை மிதமானத்தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து வறுத்த அரிசி பருப்பை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் வாணல் வைத்து 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்த பொருளை சேர்த்து கெட்டியாகி வரும்வரை கிளறவும்.
பின்னர் இதில் வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கெட்டியாகி வந்ததும் ஆறவைக்கவும்.
இறுதியாக இதை கொழுக்கட்டை போல் செய்து அடுப்பில் வேகவைத்து எடுத்தால் சுவையான மோதகம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |