இளவரசர் ஹரி பயணிக்கவேண்டிய விமானத்தின் விமானிக்கு உடல் நலம் பாதிப்பு
இளவரசர் ஹரியும், அவரது மனைவியுமான மேகனும், நைஜீரியா நாட்டுக்குச் சென்றுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே.
ஆனால், அவர்கள் பயணிக்கவேண்டிய விமானம் தாமதமானதால், தம்பதியர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
தாமதமான விமானம்
ஹரியும் மேகனும் நைஜீரியா புறப்பட்ட நிலையில், அவர்கள் செல்லவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் விமானி திடீரென உடல் நலம் பாதிக்கபட்டுள்ளார்.
ஆகவே, அவருக்கு பதிலாக வேறொரு விமானியை விமான நிறுவனம் அவசர அவசரமாக ஏற்பாடு செய்துள்ளது. என்றாலும், ஹரியும் மேகனும் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
என்றாலும், மறுநாள் காலை 5.00 மணிக்கு அவர்கள் நைஜீரியாவின் தலைநகரான Abujaவைச் சென்றடைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதற்காக, அவர்களுடைய சக பயணிகள் விமானத்திலேயே காத்திருக்கவைக்கப்பட்டுள்ளார்கள். தாங்கள் பாதுகாப்பாக வெளியேற உதவிய பணியாளர்களுக்கு ஹரியும் மேகனும் புன்னகையை பரிசாக அளித்துச் சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |