220 பயணிகளுடன் ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்: உதவி செய்ய மறுத்த பாகிஸ்தான்
டெல்லி-ஸ்ரீநகர் இண்டிகோ விமானமானது திடீர் என ஆலங்கட்டி மழையில் சிக்க, பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள விமானியின் கோரிக்கையை அந்த நாடு நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம் Turbulence எனப்படும் அதிர்வில் இருந்து தப்பிக்கவே பாகிஸ்தானின் உதவியை நாடியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட 220க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஸ்ரீநகர் புறப்பட்ட விமானமானது திடீரென ஆலங்கட்டி மழையை எதிர்கொண்டது.
உடனடியாக அந்த விமானி அவசர நிலை என ஸ்ரீநகர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். விமானம் அமிர்தசரஸில் பறந்து கொண்டிருந்தபோது, Turbulence ஏற்படுவதைக் கவனித்த விமானி, பாகிஸ்தான் வான்வெளி வழியாக பயணிக்க லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ATC) அனுமதியைக் கோரினார்.
ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடும் அதிர்வுகளுக்கு மத்தியில் அந்த விமானம் பயணப்பட்டதாக கூறுகின்றனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் வான்வெளி இந்திய விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளது. பதிலுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு இந்தியா தனது வான்வெளியையும் மூடியுள்ளது.
மரண அனுபவம்
ஸ்ரீநகர் பயணப்பட்ட அந்த விமானத்தில் டெரெக் ஓ பிரையன், நதிமுல் ஹக், சகாரிகா கோஸ், மனாஸ் பூனியா, மம்தா தாக்கூர் ஆகியோர் அடங்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இருந்தனர்.
புதன்கிழமை நடந்த இச்சம்பவத்தில் விமானம் பத்திரமாக ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அது ஒரு மரண அனுபவம். என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதியடைந்தார்கள் என்று சகாரிகா கோஸ் தமது அனுபவத்தை புதன்கிழமை கூறியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |