விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த நபர்... நடுவானில் நிகழ்ந்த பயங்கரம்: வழக்கில் தீர்ப்பு
2018ஆம் ஆண்டு, விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த நபரின் கழுத்தை விமானத்தின் இறக்கை துண்டித்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த நபரின் கதி
பிரான்சிலுள்ள Bouloc-en-Quercy என்னுமிடத்தில், விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதிக்க பயிற்சி கொடுக்கும் நிறுவனம் ஒன்றில் இணைந்துள்ளார் நிக்கோலஸ் (Nicolas Galy, 40) என்பவர்.
2018ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27ஆம் திகதி, அவரும் மற்றொருவரும் விமானம் ஒன்றிலிருந்து பாராசூட் மூலம் குதித்துள்ளனர்.
குதித்த பின் என்ன செய்யவேண்டும் என்பதை அந்த விமானத்தின் விமானி முறைப்படி சொல்லிக்கொடுக்காமல் விட்டிருக்கிறார்.
stock image
நடுவானில் நிகழ்ந்த பயங்கரம்
நிக்கோலஸ் பாராசூட்டில் நிலத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, அவர் குதித்த விமானம் திடீரென கீழிறங்கியுள்ளது.
விமானம் வேகமாக கீழிறங்கும்போது விமானத்தில் இறக்கை நிக்கோலஸின் கழுத்தைத் துண்டுக்க, நடுவானில் கொடூர மரணத்தைச் சந்தித்துள்ளார் அவர்.
பாராசூட் தரையை அடையும்போது, அதில் அவரது தலையில்லாத உடல் மட்டுமே இருந்துள்ளது. இந்த பயங்கர காட்சி, நிக்கோலஸுடன் குதித்த மற்ற நபரின் உடலில் பொருத்தப்பட்ட கமெராவில் பதிவாகியுள்ளது.
விமானிக்கு தண்டனை
நிக்கோலஸ் விமானத்திலிருந்து குதிக்கும்போது, அவர் எந்தப் பக்கம் செல்லவேண்டும், விமானம் எந்தப் பக்கம் செலும் என்பதை விமானத்தை இயக்கிய விமானி சொல்லிக்கொடுத்திருக்கவேண்டும்.
ஆனால், அவர் அதை சொல்லிக்கொடுக்கவில்லை. ஆக, நிக்கோலஸ் பாராசூட்டில் இறங்கிக்கொண்டிருக்க, அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமலே விமானி விமானத்தைத் திருப்ப, விமானத்தில் இறக்கை நிக்கோலஸின் தலையைத் துண்டித்துள்ளது.
விசாரணையில், அந்த விமானியிடம் விமானத்தை இயக்க உரிமமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விமானிக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் உடனடியாக சிறைக்குச் செல்லவேண்டியதில்லை என்று கூறியுள்ள நீதிமன்றம், ஓராண்டு காலத்துக்கு அவர் விமானத்தை இயக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |