விமானத்தை வேண்டுமென்றே மோதவுள்ளதாக விமானி மிரட்டல்., குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்; அமெரிக்க நகரத்தில் பரபரப்பு
அமெரிக்காவின் டூபெலோ நகரத்தில் கடைகளை காலி செய்து மக்களை கலைந்து செல்லும்படி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து அவசரகால சேவைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பி நகரமான டுபெலோவில் உள்ள வெஸ்ட் மெயினில், விமானம் ஒன்று வனத்தில் வட்டமீட்டு பறந்து கொண்டிருக்கிறது. அந்த விமானத்தை இயக்கம் விமானி பிரபாலான வால்மார்ட் சூப்பர்மார்கெட் மீது வேண்டுமென்றே மோதிவிடுவண என்று மிரட்டல் விடுத்துவருவதாக கூறப்படுகிறது.
இதனால், டூபெலோ நகர பொலிஸார் அங்குள்ள அனைத்து கடைகளையும் காலி செய்து, அப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரையும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அனைத்து அவசரகால சேவைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பொலிஸார் விமானியுடன் நேரடியாக பேச ஆரம்பித்துள்ளதாக் கூறப்படுகிறது.
டுபெலோ விமான நிலையத்தில் இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 90 என்ற சிறிய விமானத்தை, 29 வயதான நபர் ஒருவர் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. ஒன்பது இருக்கைகள் கொண்ட இந்த விமானம் இரண்டு என்ஜின்கள் கொண்டது.
Currently we have a 29yr old who stole this plane & is threatening to crash it into something. Polices ,ambulances ,& fire trucks are everywhere. Everything is shutdown rn pic.twitter.com/AzebdIa3tP
— City King (@CityKing_Gank_) September 3, 2022
இந்நிலையில், "மாநில சட்ட அமலாக்க மற்றும் அவசர மேலாளர்கள் இந்த ஆபத்தான சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்" என்று ஆளுநர் டேட் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்..
அந்த விமானம் சுமார் 40,000 பேர் வசிக்கும் நகரமான டுபெலோவை மையமாகக் கொண்டு ஒரு ஒழுங்கற்ற, ஜிக்ஜாக் அமைப்பில் பறந்துகொண்டிருப்பதாக FlightAware இணையதளத்தின் வரைபடம் காட்டுகிறது.