முகப்பருவா? கவலையை விடுங்க.. இதனை எளியமுறையில் போக்க இதோ சில அற்புத டிப்ஸ்!
Beauty Tips
Pimple
By Kishanthini
இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் முகப்பரு.
பொதுவாக எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள்.
அதோடு ஹார்மோன்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது முகப்பருவை உண்டாக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- நல்ல தரமான ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எடுத்துக் கொள்ளவும்.
முகத்தில் மெதுவாக தடவவும்.
தினசரி இரு முறை இதை செய்யவும்.
- மஞ்சள், தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது. அவை பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். இவற்றை இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும்.
முகத்தில் சமமாக பூசவும்.
15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.
- சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும்.
உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும்.
ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
- சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அந்த நீரின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவவும்.
- இரண்டு மேசைக் கரண்டி வெள்ளரிச் சாருடன் ஒரு மேஜைக்கரண்டி பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பருத்தி பஞ்சு பந்தை இந்த சாறில் முக்கி முகத்தை துடைக்கவும்.
இது உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய உதவும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US