முகத்தில் இந்த இடத்தில் பரு அடிக்கடி வந்தா உடலுக்கு பிரச்சனையாம்!
பெரும்பாலும் பலருக்கு முகப்பரு மற்றும் பிம்பிள் பிரச்சினை அடிக்கடி வரும் ஒன்றாகும். இந்த பிரச்சனையால் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இது எதனால் வருகின்றது, இதை எவ்வாறு தடுப்பது என்று யோசித்து இருப்பீர்கள்.. ஆனால் அடிக்கடி ஒரே இடத்தில் பிம்பிள் வந்தால் அது உடலில் ஏதோ ஒரு பாகத்தில் பிரச்சினை வருவதற்கான அறிகுறியாம்.
ஆகவே முகப்பருவை அலட்சியமாக எடுக்காமல், அதைபற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
முகப்பரு ஏன் வருகின்றது?
முகப்பருக்களானது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனாலும், சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து இருப்பதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றது.
மேலும் உண்ணும் உணவுகள், மோசமான சரும பராமரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவையாளும் முகப்பருக்கள் வரக்கூடும்.
இவ்வாறு சில காரணங்களால் முகப்பருக்கள் வந்தாலும், உடலில் இருக்கும் ஒரு சில உறுப்புக்களிலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
எங்கு வந்தால் பிரச்சினை ஏற்படும் என தெரிந்துக்கொள்வோம்.
நெற்றி
நெற்றிப் பகுதியில் முகப்பரு வந்தால், அவரது செரிமான மண்டலத்தில் பிரச்சனை வரும். செரிமான பிரச்சனை சரியாவதற்கு நீர் அதிகம் அருந்த வேண்டும். முடிந்தளவு 7 மணிநேரமாவது தூங்க வேண்டும்.
கன்னம்
அழுக்கு நிறைந்த தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புக்களைப் பயன்படுத்தினால் கன்னப்பகுதியில் முகப்பருக்கள் வரும். இதைத் தடுப்பதற்கு அடிக்கடி தலையணை உறைகளை மாற்ற வேண்டும். மேலும் முகத்தை அடிக்கடி கழுவிக் கொள்ள வேண்டும்.
மூக்கு
மூக்கு பகுதியில் முகப்பருக்கள் வந்தால், அது குடல் சமநிலையின்மை அல்லது உணவு அழற்சிகளால் ஏற்படும். எனவே மூக்கு மற்றும் தாடையைச் சுற்றி பருக்கள் வந்தால், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனை வரும்.
தாடை மற்றும் கழுத்து
தாடை மற்றும் கழுத்து பகுதியில் முகப்பருக்கள் வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை என அர்த்தம். உடலில் ஈஸ்ட்ரோஜெனை விட ஆன்ட்ரோஜென் அதிகமாக இருந்தால் தாடைப் பகுதியில் பருக்கள் வரும்.
முதுகு, கைகள் மற்றும் தொடை
முதுகு, கைகள் மற்றும் தொடை பகுதியில் முகப்பருக்கள் வந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அர்த்தம். சுத்தமான ஆடைகளை அணிவது, முதுகுப் பகுதியில் அதிக அழுத்தத்தைக் கொடுப்பதைத் தவிர்ப்பது, சன் ஸ்க்ரீன், பாடி லோசன் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் இதை தடுக்கலாம்.