வாயில் எச்சில் ஊற அன்னாசிப்பழ பாயாசம் செய்து பாருங்க...
பாயாசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் பால் பாயாசம், பருப்புப் பாயாசம், அவல் பாயாசம் என பல வகைகள் உள்ளது. சிலர் வித்தியாசமான முறையில் வீட்டில் இருந்து ஒரு சில உணவை செய்து பார்ப்பார்கள்.
ஆகவே அனைவருக்கும் பிடித்த பழமாக இருப்பது அன்னாசி. அதைவைத்து எப்படி சுவையான ஒரு பாயாசம் செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்
- காய்ச்சிய பால் - 1 லிட்டர்
- கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்
- ஜவ்வரிசி - 1/2 கப்
- பைனாப்பிள் எசன்ஸ் - 1 தே.கரண்டி
- நெய் - தேவையான அளவு
- முந்திரி - தேவையான அளவு
- கிஸ்மிஸ் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அன்னாசி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஜவ்வரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சி தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டவுடன், ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து தண்ணீர் போகும் வரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பால் கொதித்தவுடன் அதில் வெட்டி வைத்த அன்னாசி துண்டுகளை சேர்த்துக்கொதிக்க வைத்து, ஜவ்வரிசியை சேர்த்து 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் ன்டென்ஸ்டு மில்க், அன்னாசி எசன்ஸ் மற்றும் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரியை இதனுடன் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான அன்னாசிப்பழ பாயாசம் ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |