கோல்ஃப் மைதானத்தில் இடி சத்தத்துடன் விழுந்த விமானம்! விபத்தில் உயிர் தப்பிய வீரர்கள்: வீடியோ
அவுஸ்திரேலியாவில் சிறிய விமானம் ஒன்று கோல்ஃப் மைதானத்தில் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோல்ஃப் மைதானத்தில் விழுந்த விமானம்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள மோனா வேல் கோல்ஃப் கிளப்பில்(Mona Vale Golf Club) சிறிய பைபர் செரோக்கி(Piper Cherokee) ரக விமானம் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
This Piper Cherokee crashed at Mona Vale Golf Club near Sydney, Australia, during a training flight today, with an instructor and student on board.pic.twitter.com/jSgf6rQZPa
— Massimo (@Rainmaker1973) August 17, 2025
50 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் விமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, விமானம் அவசரமாக கோல்ஃப் மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதில் விமானத்தில் இருந்த இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உதவிக்கு சென்ற கோல்ஃப் வீரர்கள்
விமானம் மிகப்பெரிய இடி சத்தத்துடன் மைதானத்தில் விழுந்ததால் அதிர்ச்சியடைந்த கோல்ஃப் வீரர்கள் உடனடியாக உதவிக்கு சென்றுள்ளனர்.
கோல்ஃப் வீரர்களின் இந்த செயல் உள்ளூர் அதிகாரிகளால் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.
இணையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்களில், விமானத்தின் இறக்கைகள் உடைந்து இருப்பதையும், தரையிறங்கும் கியர் சாதனம் தனியாக பிரிந்து கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |