14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம்

United Kingdom France
By Balamanuvelan Sep 01, 2026 03:52 PM GMT
Report

Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

[14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம் | Pistol Found 14 Years After Brit Family Shot Dead]

பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்

2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோர் உயிரிழந்தனர்.

14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம் | Pistol Found 14 Years After Brit Family Shot Dead

தம்பதியரின் ஒரு மகளான Zainab (7) காயத்துடன் உயிர் பிழைக்க, மறு நாள் தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருப்பது தெரியவந்தது. 

பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணம்

பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஒருவர் மரணம்

இந்த துப்பாக்கிச்சூட்டில், அவ்வழியே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான Sylvain Mollier (45) என்பவரும் கொல்லப்பட்டிருந்தார்.

14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம் | Pistol Found 14 Years After Brit Family Shot Dead

வழக்கில் முக்கிய திருப்பம்

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஏரி ஒன்றின் அடியிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், அது ஒரு சுவிஸ் ராணுவ துப்பாக்கி. அத்துடன், 1935ஆம் ஆண்டு, அதே மொடலில் 940 துப்பாக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. 

14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம் | Pistol Found 14 Years After Brit Family Shot Dead

மேலும், தாக்குதல்தாரி, ஒரு முறை தன் இலக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்யும் வகையில், இரண்டாவது முறை அதே நபரை சுடும் ஒரு கைதேர்ந்த, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற நபர்.

அத்துடன், இந்த வகை துப்பாக்கிகளில் ஒரு சீரியல் நம்பர் இருக்கும். ஆகவே, அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது முதல், அதை யார் பயன்படுத்தினார் என்பது வரை கண்டுபிடிக்கமுடியும்.

எல்லாவற்றிற்கும் மேல், தண்ணீருக்குள் எத்தனை ஆண்டுகள் கிடந்திருந்தாலும், அதிலுள்ள DNAவைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் தற்போது உள்ளதால், முன்பு கிடைத்த ஆதாரங்களை, தற்போது கிடைத்துள்ள ஆதாரத்துடன் இணைத்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கக்கூடும் என்பதே நல்ல செய்தி.

ஆக, அந்த துப்பாக்கி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், Saad al-Hilli குடும்பத்தினரைக் கொல்ல குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி இதுதானா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US