50 மீற்றர் உயரத்திலிருந்து விழுந்த அருவருப்பான விடயம்... கட்டுமானப்பணியாளருக்கு நேர்ந்த பரிதாபம்
*கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தலையில் 50 மீற்றர் உயரத்திலிருந்து ஒர் போத்தல் விழுந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
*அந்த போத்தலில் இருந்தது சிறுநீர்!
இங்கிலாந்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை. 50 மீற்றர் உயரத்திலிருந்து விழுந்த ஒரு பொருள் மருத்துவமனைக்கு அனுப்பியது.
மோசமான விடயம் என்னவென்றால், அந்த கட்டுமானப் பணி நடந்த இடத்தில் கிரேன் ஒன்றை இயக்கிக்கொண்டிருந்த ஒருவர், கீழே இறங்குவதற்கு வருத்தப்பட்டுக்கொண்டு ஒரு போத்தலில் சிறுநீர் கழித்து வைத்திருக்கிறார்.
அந்த போத்தல் 50 மீற்றர் உயரத்திலிருந்து விழ, கீழே நின்ற பணியாளர் ஒருவரது தலையில் பட்டு, மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது அவருக்கு.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
stock image