Google Pixel 10 சீரிஸ் ஆகஸ்ட் 20 அறிமுகம்: புதிய வசதிகள், விலை விவரங்கள் இதோ
Google நிறுவனம் தனது அடுத்த முக்கிய ஹார்ட்வேர் நிகழ்வை ஆகஸ்ட் 20-ஆம் திகதி நியூயார்க் நகரத்தில் நடத்தவுள்ளது.
இதில் Pixel 10 தொடர் ஸ்மார்ட்போன்கள், புது watches மற்றும் buds வெளியாவதற்கான வாய்ப்புகள் உறுதியாக உள்ளன.
Pixel 10 தொடரில் நான்கு மொடல்கள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன: Pixel 10, Pixel 10 Pro, பாரிய அளவிலான Pixel 10 Pro XL மற்றும் மடிக்கக்கூடிய Pixel 10 Pro Fold.
இந்த மொடல்களில் Obsidian, Indigo, Limoncello, Moonstone மற்றும் Jade போன்ற வண்ணங்கள் கொண்டிருக்கும்.
Pixel 10 மொடலில் முதல் முறையாக மூன்று பின்பக்க கமெராக்கள் வழங்கப்படவுள்ளன. வைட், அல்ட்ராவைட் மற்றும் டெலிபோட்டோ. ஆனால் முக்கிய மற்றும் அல்ட்ராவைட் சென்சார்கள் Pixel 9a-வில் பயன்படுத்தப்பட்டவை என்பதால் செயல்திறன் சற்றே குறையலாம்.
Pixel 10 Pro மற்றும் Pro XL மொடல்கள் மேம்பட்ட கேமரா ஹார்ட்வேருடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய Pixel 10 Pro Fold மொடலில் வேறுபட்ட கமெரா அமைப்பு வழங்கப்படலாம்.
சிப்செட் பகுதியில், புதிய Tensor G5 TSMC-இன் 3nm தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இது வேகம் மற்றும் ஆற்றல் திறனை பெரிதும் உயர்த்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
AI அம்சங்களாக Speak-to-Tweak, Sketch-to-Image மற்றும் புதிய Pixel Sense virtual assistant அறிமுகமாக உள்ளது.
இந்திய விலை: Pixel 10 ரூ.79,999 முதல், Pixel 10 Pro ரூ.99,999 வரை இருக்கலாம். அதேபோல் Pixel 10 Pro XL ரூ.1,02,000க்கு மேலாக இருக்கலாம். Fold மாடல் ரூ.1,36,500க்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Google Pixel 10 launch date India, Pixel 10 series price in India, Pixel 10 Pro specifications, Google Tensor G5 chip, Pixel 10 AI features, Pixel 10 Fold price, Made by Google event 2025, Pixel 10 camera upgrades, Pixel 10 vs Pixel 9 comparison, Sketch to Image Pixel AI