பீட்சாவில் பிளாஸ்டிக் உள்ளதா? பிரபல உணவகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.. வெளியான அதிர்ச்சி தகவல்
பிரபல உணவகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கன் மற்றும் பீட்சாவில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் கலந்துள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இந்த நவீன காலத்தில் மக்கள் சமைத்து உண்பவர்களை விட ஹோட்டலில் வாங்கி சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.
அதுவும் குறிப்பாக பீட்ஸா, சிக்கன் போன்ற உணவுகளை தேடி தேடி சாப்பிடுபவர்கள் அதிகரித்து விட்டனர். இவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை அறிந்தும் மீண்டும் அதே தவறை தான் செய்வார்கள்.
இந்நிலையில் ஜார்ஜ் வாஷிங்கடன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து பிரபல உணவகமான மெக்டொனால்ட்ஸில் பீட்சா, சிக்கன் போன்ற உணவுகளை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அதன்படி, அந்த உணவுகளில் அதிக அளவிலான பித்தலேட்டுகள் எனும் ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ரசாயனம் பெரும்பாலும் சோப்பு, கையுறைகள் போன்றவற்றை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும்.
அது போல பிளாஸ்டிக்கை உருக்கவும் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் சிக்கன், பீட்சா போன்ற 64 உணவு வகைகளை ஆராய்ச்சி செய்த போது சுமார் 80 சதவீதம் பித்தலேட்டுகள் இருப்பது கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்தப் ரசாயனம் சேர்ந்த உணவுகளை சாப்பிடுவதால் பெண்கள் கருவுறுதல் 70% பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.