புலம்பெயர் மக்களுக்கு எதிரான திட்டம் வெற்றி: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு
சிறிய படகுகளில் எல்லை கடக்கும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 20 சதவீதம் வரையில் சருவடைந்துள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் திங்களன்று தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை
குறித்த முன்னேற்றமானது குடியேற்றக் கொள்கை தொடர்பாக அவரது கட்சி மற்றும் நாட்டில் இருந்து எழுந்துள்ள விமர்சனங்களை எளிதாக்கும் என்று ரிஷி சுனக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
@reuters
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ரிஷி சுனக் அரசாங்கம், சிறிய படகுகளில் எல்லை கடக்கும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை குறைக்க உறுதி அளித்திருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் ஆட்சி பொறுப்புக்கு வந்த ரிஷி சுனக் அளித்த 5 வாக்குறுதிகளில் இது ஒன்று. ஆனால் புலம்பெயர் மக்கள் விவகாரத்தில் துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதில் ரிஷி சுனக் தவறிவிட்டதாக அவரது கட்சியிலும் பொதுமக்களிடம் இருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
Small boat crossings are down 20%. But we need to go further.
— Rishi Sunak (@RishiSunak) June 5, 2023
Under my leadership, we will stop the boats. pic.twitter.com/U45bkGPb6Z
மட்டுமின்றி, வரலாறுகாணாத வகையில் கடந்த ஆண்டு புலம்பெயர் மக்களின் வருகையும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில், 5 மாதங்களில் 20 சதவீதம் வரையில் புலம்பெயர் மக்களின் வருகையை கட்டுப்படுத்தியுள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இதுவரை 7,600 புலம்பெயர் மக்கள்
தமது திட்டம் வெற்றியடைந்துள்ளது எனவும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி இந்த விவகாரத்தில் தமது அரசாங்கம் திருப்தி அடையவில்லை என்றும் பாராளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்ற கடுமையாக உழைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
ஆனால் பல்லாயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கைகளின் நிலுவையை அகற்ற சுனக் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு இதுவரை 7,600 புலம்பெயர் மக்கள் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில், சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் அல்பேனியா மக்களின் எண்ணிக்கை 90 சதவீதம் வரையில் சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அல்பேனிய மக்களின் 50 புகலிடக் கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறது, இது முன்பு ஐந்தில் ஒன்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.