ரஷ்ய செல்வந்தரை சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற்றும் திட்டம்: எதிர்ப்பும் ஆதரவும்
ரஷ்ய செல்வந்தர் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு சுவிட்சர்லாந்திலேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
எதிர்ப்பும் ஆதரவும்
Andrey Melnichenko என்னும் ரஷ்ய செல்வந்தர் சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில் வாழ்ந்துவருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துள்ளன. ஆனால், Zug மாகாணத்தில் Eurochem என்னும் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார் Andrey.
The Associated Press
ஆகவே, அவரை வெளியேற்ற Graubünden மாகாண அரசின் உறுப்பினர்கள் சிலருக்கு மனதில்லை. Andrey நீண்ட காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருவதை சுட்டிக் காட்டி, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற அவசியமில்லை என்கிறார்கள் அவர்கள்.
புலம்பெயர்தல் செயலகம் எதிர்ப்பு
ஆனால், சுவிஸ் புலம்பெயர்தல் மாகாணச் செயலகமோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Andrey பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே நேரம் செலவிடுவதாகக் கூறி, அவர் குடியிருப்பு அனுமதி வைத்திருக்கத் தகுதி உடையவர் அல்ல என்கிறார்கள் புலம்பெயர்தல் அலுவலர்கள்.
ஆகவே, அவர்கள் Andreyயை நாட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பாக பெடரல் நிர்வாக நீதிமன்றம் முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.