விமான நிலையத்துக்கு மன்னர் பெயரை சூட்ட திட்டம்: அமைச்சர்களுக்கு மன்னருடைய பணிவான கோரிக்கை
தனது முடிசூட்டுவிழாவையொட்டி, விமான நிலையம் ஒன்றின் முனையத்திற்கு தன் பெயரை சூட்ட திட்டமிடப்படுவதாக மன்னர் சார்லசுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.
விமான நிலையத்துக்கு மன்னர் பெயர்
ஹீத்ரோ விமான நிலையம், முடிசூட்டுவிழாவையொட்டி, முனையம் ஒன்றிற்கு (Terminal 5) மன்னர் சார்லஸ் பெயரை சூட்ட விரும்பியுள்ளது.
ஏற்கனவே, மற்றொரு முனையத்திற்கு (Terminal 2) மகாராணியாரை கௌரவிக்கும் வகையில் Queen’s Terminal என பெயரிடப்பட்டுள்ளது.
(Image: POOL/AFP via Getty Images)
அமைச்சர்களுக்கு மன்னருடைய கோரிக்கை
ஆனால், இந்த தகவல் அறிந்ததும், அமைச்சர்களை அழைத்து, மன்னர் பெயரை விமான நிலைய முனையத்துக்கு சூட்ட வேண்டாம் என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் கேட்டுக்கொண்டுள்ளது.
(Image: AFP via Getty Images)
சுற்றுச்சூழல் விரும்பியான மன்னர், அதன் காரணமாகவும், தனக்கும் விமான நிலையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததாலும், விமான நிலையத்தின் கோரிக்கையை பணிவுடன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.