லிஸ் ட்ரஸ்ஸை பிரதமர் பதவிலிருந்து அகற்ற திட்டம்: அடுத்த பிரதமர் ரிஷியா?
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை பதவிலிருந்து அகற்ற திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷி சுனக் பிரதமராகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரித்தானியாவின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரை பிரதமர் பதவிலிருந்து அகற்ற கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு வருவதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், லிஸ் ட்ரஸ்ஸுக்கு பதிலாக பென்னி மோர்டாண்ட் அல்லது ரிஷி சுனக்குக்கு பிரதமர் பதவி பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையதள ஆசிரியரான Paul Goodman தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் பதவிக்கு பலருடைய பெயர்கள் அடிபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன், சாவித் ஜாவித், Kit Malthouse மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டாலும், பென்னி மோர்டாண்ட் அல்லது ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்கலாம் என்றும் Paul Goodman தெரிவித்துள்ளார்.