பிரித்தானியாவில் பயங்கரம்... மின்னல் வேகத்தில் கடலில் விழுந்த விமானம்! கமெராவில் சிக்கி மிரள வைக்கும் காட்சி
பிரித்தானியாவின் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவான Bournemouth Air Festival செப்டம்பர் 2ம் திகதி தொடங்கி செப்டம்பர் 5ம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை செப்டம்பர் 4ம் திகதி Bournemouth Air Festival-ல் பங்கேற்ற சிறி ரக விமானம் ஒன்று பூல் துறைமுகத்தின் சாண்ட்பேங்க்ஸ் பகுதியில் கடலில் சொருகி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், விபத்துக்குள்ளான விமானம் Air Festival-ல் பங்கேற்றுள்ளது, இதில் இரண்டு பேர் பயணித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த இரண்டு பேரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர், ஆம்புலன்ஸ் சேவை குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, விபத்து நடந்த பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அன்றைய தினம் Bournemouth Air Festival-ல் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
Bournemouth Air Festival Footage of Wingwalker Plane crash. #bournemouthairfestival #Wingwalker
— Helixx vr (@Helixx_vr) September 4, 2021
Glad to see Pilot and Walker are safe ✌️@SproutSgt @VrPancakes pic.twitter.com/W1x8aoAT7h
எனினும், இன்று செப்டம்பர் 5ம் திகதி திட்டமிட்ட படி நிகழ்வுகள் நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.