சிறிய ரக விமானம் மோதி உயிரிழந்த சிறுவன்: கனடாவில் ஒரு வித்தியாசமான விபத்து
கனடாவில், படகுத்துறையில் நின்ற சிறுவன் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் அவன் பரிதாபமாக பலியாகியுள்ளான்.
ஒரு வித்தியாசமான விபத்து
நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Caesarea என்னுமிடத்தில், சிறுவன் ஒருவன் படகுத்துறை ஒன்றில் நின்றுகொண்டிருந்திருகிறான்.
அப்போது, திடீரென ஒரு சிறிய ரக விமானம் வந்து அவன் மீது மோதியுள்ளது.
வீடியோவை காண
அவன் மீது மோதிய அந்த விமானம், அருகில் நின்ற படகு ஒன்றின் மீது சென்று தலைகீழாக விழுந்துள்ளது.
இந்த விபத்தில் அந்த சிறுவன் உயிரிழக்க, விமானத்தை இயக்கியவரும் அவரது சக பயணி ஒருவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்தப் படகு தண்ணீரிலும் தரையிறங்கக்கூடிய ஒரு விமானம் ஆகும்.
ஆக, என்ன நடந்தது, அந்த விமானத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டு அது விழுந்ததா, அல்லது, விமானத்தை அருகிலுள்ள ஏரியில் தரையிறக்க முயலும்போது அந்த சிறுவன் மீது மோதியதா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
சுமார் 800 பேர் மட்டுமே வாழும் Caesarea சமூகத்தில் சிறுவன் ஒருவனை பலிவாங்கிய இந்த துயர விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதனால் அந்த விபத்து ஏற்பட்டது என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |